புதுச்சேரி: காங்கிரஸ் - தி.மு.க தொகுதிப் பங்கீட்டுக்குப் பிறகு தனியாகப் போட்டியிடும் முடிவில் உள்ள CPI(M)!

Update: 2021-03-14 11:29 GMT

புதுச்சேரியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு மதச்சார்பற்ற கூட்டணியான காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி CPI(M)க்கு போட்டியிட இடமளிக்காததைத் தொடர்ந்து, யூனியன் பிரதேசத்தில் நான்கு இடங்களில் தனியாகப் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(CPIM) முடிவு செய்துள்ளது.


தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் மற்றும் திமுகவினரால் நடத்தப்பட்ட விதம் குறித்து வருத்தம் தெரிவிப்பதாக CPIM தெரிவித்துள்ளது. மேலும், "லெப்டினென்ட் கவர்னர் கிரண் பேடி அவர்களது கொள்கையை எதிர்ப்பதில்  காங்கிரஸ், பிற மதச்சார்பற்ற கட்சிகளுக்கு நெருக்கமாக இருந்தோம். கடந்த நான்கு ஆண்டுகளாக யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் உரிமைகளைப் பாதுகாக்கக் கடுமையாகப் போராடினோம். ஆனால் தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ளோம்," என்று கட்சியின் செயலாளர் R ராஜாங்கம் செய்தியாளருக்குத் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை முன்னாள் முதலமைச்சர் V நாராயண ஸ்வாமியைக் கட்சி குழு சந்தித்துப் பரிசீலிக்கப்படாதது குறித்து அதிருப்தியைத் தெரிவித்ததாகத் தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பு 30 தொகுதிகளில் 13 தொகுதிகளை ஒதுக்கி தி.மு.க வுடன் காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

CPI மற்றும் VCK ஆகிய இருகட்சிக்கும் தலா ஒரு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து மீதமுள்ள 15 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட முடிவு செய்து, ஆனால் ஒரு இடத்தை கூட CPIM க்கு ஒதுக்கவில்லை. "எங்கள் கட்சிக்கு உரிய ஒதுக்கீடு வழங்கக் காங்கிரஸிடம் கேட்டுள்ளோம். ஒரு நாட்களில் சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றால் தனியாக நான்கு தொகுதிகளில் கட்சி வேட்பாளர்களை நிறுத்தும்," என்று ராஜாங்கம் தெரிவித்தார்.


திருபுவனாய், லாஸ்பேட், TR பட்டினம் மற்றும் பஹூயூர் தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்களை நிறுத்தவுள்ளதாக CPIM யின் உள்ளூர் தலைமை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நான்கு தொகுதிகளிலும் வாக்குகளைப் பெற்றுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த சட்டமன்ற தேர்தலில் மஹே தொகுதியில் CPIM ஆதரவாளர் V ராமச்சந்திரன் வெற்றிபெற்றார் என்பதைக் குறிப்பிட்டது.

Similar News