கொரோனா தடுப்பூசி திருவிழாவை பயன்படுத்திக் கொள்ளுமாறு Dr. தமிழிசை வேண்டுகோள் !
புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து பல விழிப்புணர்வு செயல்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு வருகிறார். அவரின் முயற்சியால் புதுச்சேரியில் கொரோனா மிகவும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் இன்று புதுச்சேரியில் நடந்த கொரோனா தடுப்பூசி திருவிழாவை நேரில் சென்று பார்வையிட்டார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "புதுச்சேரி பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை பார்வையிட்டேன்.இந்நிகழ்வில் புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கொரோனா இல்லாத மாநிலமாக புதுச்சேரியை மாற்றுவதற்கு (ஜூன் 16-19) தேதிகளில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி திருவிழாவில் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." என்று அவர் கூறி இருந்தார்.