புதுச்சேரி : சிறப்புத் தடுப்பூசி இயக்கத்தைத் தொடங்கி வைத்தார் ஆளுநர் Dr தமிழிசை!

Update: 2021-07-10 11:03 GMT

சனிக்கிழமை அன்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு "கோவிட் தடுப்பூசி இயக்கத்தை" தொடங்கி வைத்தார். புதுச்சேரி மாநிலத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யச் சிறப்பு கொரோனா தடுப்பூசி இயக்கங்கள் நடத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்று 100 மையங்களில் நடத்தப்படும் சிறப்பு தடுப்பூசிகள் இயக்கங்கள் மூன்றாவது முறையாகும். யூனியன் பிரதேசத்தில் இதுவரை 5 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை, ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு மீண்டும் பள்ளிகளைத் திறக்க தயாராகுமாறு கேட்டுக்கொண்டார். சரியான நேரத்தில் பள்ளிகள் திறக்கப்படும், ஆசிரியர்கள் தயார் செய்து கொள்ளுமாறும் குறிப்பிட்டார்.

மேலும் மக்கள் தங்கள் அச்சத்தை மறைத்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வருவது வரவேற்க தக்கது என்று Dr தமிழிசை சௌந்தர ராஜன் கூறினார். மக்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்திய அரசு மற்றும் சுகாதாரத் துறை தொழிலாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார்.

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் என்றும் கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாத்துக்கொள்ளத் தடுப்பூசி செலுத்த முன்வருமாறும் வலியுறுத்தினார்.


கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று லெப்டினென்ட் ஆளுநர் தெரிவித்தார்.

Similar News