புதுச்சேரி: கிராமப்புற வீடுகளில் JJM திட்டத்தின் கீழ் 100 சதவீத குழாய் குடிநீர் வசதி வெற்றி!

Update: 2021-05-11 08:36 GMT

திங்கட்கிழமை அன்று ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, புதுச்சேரியில் உள்ள அனைத்து கிராமப்புறங்களுக்கு 100 சதவீத குழாய் குடிநீர் என்ற இலக்கை ஜல் ஜீவன் மிஷன்(JJM) கீழ் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.


மேலும் பஞ்சாப், தாத்ரா, நகர் ஹவேலி போன்றவையும் கிராமப்புறங்களில் 75 சதவீத குழாய் குடிநீர் என்ற இலக்கை கடந்துள்ளது என்றும் அமைச்சகம் தெரிவித்தது. மேலும், "புதுச்சேரியில் அனைத்து கிராமப்புற வீடுகளிலும் 100 சதவீத குடிநீர் வசதியை உறுதி செய்வதன் மூலம் தற்போது 'ஹர் கர் ஜல்' யூனியன் பிரதேசமாக மாறியுள்ளது," என்றும் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள 1.16 லட்ச கிராமப்புற இல்லங்களுக்கு தற்போது குடிநீர் வசதி கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது, கோவா, அந்தமான் மற்றும் தெலங்கானாவைத் தொடர்ந்து கிராமப்புற வீடுகளுக்குக் குடிநீர் வசதி வழங்கியதில் நான்காவது மாநிலமாக மாறியுள்ளது.

புதுச்சேரியில் நிலையான குடிநீர் வசதியை உறுதி செய்ய செயல்பட்டு வருகின்றது. புதுச்சேரியில் ஆறுகள் மற்றும் பல துணை ஆறுகள் உள்ளன. புதுச்சேரி மாவட்டத்தின் ஐந்து ஆறுகள் உள்ளன, காரைக்காலில் ஏழு, மஹேவில் இரண்டு மற்றும் யாணமில் ஒன்று இருக்கிறது என்று அமைச்சகம் தெரிவித்தது.


புதுச்சேரியில் குடிநீர் திட்டத்திற்கு முக்கியத்துவம் பெரும் வகையில், தொடர்ந்து குளங்களை அகற்றுவது மற்றும் நீர்நிலைகளைத் தூர்வாருவது போன்றவற்றைத் தொடர்ந்து செய்து வருவதாகத் தெரிவித்தார்.

source: https://www.hindustantimes.com/india-news/puducherry-achieves-100-tap-water-connection-in-rural-areas-under-jjm-101620662973437-amp.html

Similar News