புதுச்சேரி: உதவி பெரும் பள்ளி ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள தொகையை வழங்க Lt கவர்னர் ஒப்புதல்!

Update: 2021-03-07 13:22 GMT

புதுச்சேரி லெப்டினன்ட் கவர்னர் தமிழிசை சௌந்தராஜன் வெள்ளிக்கிழமை அன்று, 33 அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள தொகையை வழங்க அனுமதியளித்துள்ளார். மேலும் கடந்த 14 மாதங்களில் அத்தகைய பள்ளிகளில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கும் ஓய்வூதியத்தை வழங்கவும் அவர் அனுமதியளித்துள்ளார்.




 மேலும் லெப்டினன்ட் கவர்னர், யூனியன் பிரதேசத்தின் தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார் மற்றும் அவரது ஆலோசகர் C சந்திரமௌலி மற்றும் A P மகேஸ்வரி ஆகியருடன் தற்போது நிலுவையில் உள்ள தொகை வழங்காதது குறித்து ஆலோசனை நடத்தினார்.

மேலும் புதுச்சேரியில் பள்ளிக் கல்வி சட்டம் குறித்தும் மற்றும் பணம் வழங்கும் நிதி குறித்தும் ஆராய ஒரு குழு அமைக்கவுள்ளதாக சௌந்தரராஜன் தெரிவித்ததாகச் செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.




சுமார் 300 ஓய்வுபெற்ற ஊழியர்கள் உட்பட 800 ஊழியர்கள் இதன் மூலம் பயனடையப்போவதாகவும் மற்றும் அவர்களுக்கு 30 கோடி மானியங்கள் மூலம் வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஓய்வுபெற்ற ஊழியர்களும் மற்றும் பிற ஊழியர்களும் ஊதியத்துக்காகப் போராட்டங்களை நடத்தினர்.

Similar News