புதுச்சேரி: மக்கள் காங்கிரஸ் கூட்டணியை நிராகரிப்பர் - பா.ஜ.க MP தேஜஸ்வி சூர்யா!

Update: 2021-03-24 10:56 GMT

புதுச்சேரியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், V நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் சரியாகச் செயல்படத் தவறியதால் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை யூனியன் பிரதேச மக்கள் அவர்களை நிராகரிப்பர் என்று பா.ஜ.க தேசிய இளைஞர் அணி தலைவரும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான தேஜஸ்வி சூர்யா செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்துள்ளார்.




புதுச்சேரியில் பா.ஜ.க சார்பு வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் செய்த பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், காங்கிரஸ் அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிகளைச் செய்யத் தவறிவிட்டது. "தற்போதைய தேர்தலில் நாராயணசாமி 30 தொகுதிகளில் போட்டியிடப் பயப்படுகிறார். அதே போல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்திலிருந்து 2019 தேர்தலில் போட்டியிட முடியவில்லை. பின்னர் அவர் கேரளாவுக்குச் சென்றார். ஆனால் அவரது தலைவரைப் போன்று நாராயணசாமி வேறு மாநிலத்தில் சென்று போட்டியிட முடியாது," என்று அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் அரசாங்கத்தின் செயலற்ற தன்மையால் யூனியன் பிரதேசத்தில் வேலையில்லா விகிதத்தை அதிகரித்துள்ளது. யூனியன் பிரதேசத்தில் உள்ள மக்கள், ஜவுளி ஆலை, IT பார்க்ஸ் மற்றும் சுற்றுலாத் துறையைப் புதுப்பிக்க விரும்புகின்றனர். இது அவர்களது தரத்தை உயர்த்தி நல்ல வேலையை வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.



இப்பகுதி சுற்றுலா மற்றும் கல்வித் துறையில் முன்னேற வாய்ப்புள்ளது என்பதைக் குறிப்பிட்டு பா.ஜ.க யூனியன் பிரதேசத்தில் அனைத்து துறையிலும் வளர்ச்சியைக் கொண்டுவரும் என்று அவர் தெரிவித்தார். ஏப்ரல் 6 இல் புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. NDA கூட்டணி சார்பாக முதலமைச்சர் வேட்பாளராக N ரங்கசாமி போட்டியிடவுள்ளார்.

Similar News