புதுச்சேரி: தேர்தலில் வெற்றிபெற முழு ஒருங்கிணைப்புடன் ஈடுபட்டுள்ள NDA கூட்டணி!

Update: 2021-03-11 03:34 GMT

ஏப்ரல் 6 இல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க, அனைத்து இந்திய NR காங்கிரஸ் மற்றும் அ.இ.அ.தி.மு.க உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி முழு வீச்சுடன் ஆட்சியைப் பிடிப்பதற்கு முழு ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருவதாகப் புதுச்சேரியின் பா.ஜ.க பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா புதன்கிழமை அன்று தெரிவித்தார்.



முன்னரே 30 தொகுதிகளில் 16 தொகுதிகளில் AINRC போட்டியிடும் என்று NDA முடிவு செய்துள்ளதாக முன்னரே சுரானா தெரிவித்திருந்தார். "நாங்கள் முழுமையான ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருகின்றோம். கருத்துக்கணிப்புகளின் படி, AINRC தலைவரும் மற்றும் முன்னாள் புதுச்சேரி முதலமைச்சருமான N ரங்க ஸ்வாமி NDA வால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்," என்று அவர் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை அன்று யூனியன் பிரதேசமான புதுச்சேரி N ரங்க ஸ்வாமி தலைமையின் கீழ் இயங்கும் என்று குறிப்பிட்டார். "வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி தோற்கடிக்கப்படுவதே எங்களின் முக்கிய நோக்கம்," என்று கூறினார். மேலும் பா.ஜ.கவின் தேர்தல் அலுவலகத்தைத் திறக்கும் விழாவின் போது, புதுச்சேரியில் ஒரு வலுவான கட்சியாக மாறிவருவதாக நமச்சிவாயம் தெரிவித்தார்.




 இதற்கிடையில் பாட்டாளி மக்கள் கட்சி( PMK) 15 தொகுதிகளின் வேட்பாளர்களை அறிவித்து வரவிருக்கும் தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக S ராமதாஸ் அறிவித்தார்.

Similar News