புதுச்சேரியில் NDA கூட்டணி வெற்றி குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ள பிரதமர் மோடி!

Update: 2021-03-31 04:14 GMT

புதுச்சேரியில் வரவிற்கும் சட்டமன்ற முன்னிட்டு புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்தைச் செவ்வாய்க்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, நான்கு மாநிலங்களில் மற்றும் புதுச்சேரியில் நிச்சயம் வெற்றி பெறப்போவதாக உறுதி செய்தார். மேலும் அவர் யூனியன் பிரதேசத்தின் காங்கிரஸின் நிலைமை அவர்கள் நாராயணசாமிக்குச் சீட்டுக் கொடுக்க மறுத்தபோது வெளிப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.




நாராயணசாமி அவர்களுக்குச் சீட்டு மறுக்கப்பட்டதைக் குறிப்பிட்டு, "புதுச்சேரியில் நிலைமை தனித்துவமாக உள்ளது," என்று கூறினார். மேலும், "அது காங்கிரஸ் நிலைமையை வெளிப்படையாகக் காண்பித்துள்ளது. பல ஆண்டுகளாக அவர்களுக்கு விசுவாசமாக இருந்த போதிலும் அவருக்குச் சீட்டு மறுக்கப்பட்டது," என்று புதுச்சேரியில் AFT திடலில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார்.

புதுச்சேரியின் முந்தைய அரசாங்கத்தை ஒரு செயல்படாத அரசாங்கம் என்று குறிப்பிட்டு, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களே முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் உள்கட்டமைப்பு வசதிகள், வேலை வாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது குறித்து மத்திய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அவர் மேலும் வலியுறுத்தினார். மேலும் அவர் இப்பகுதியில் ஆன்மிக வளர்ச்சியிலும் பெரும் நோக்கம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் மத்திய அரசாங்கம் 6000 வீடுகளைக் கட்டியுள்ளது மற்றும் 8000 வீடுகள் கட்டுமானத்தின் கீழ் உள்ளன என்று மோடி தெரிவித்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 2000கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.




மேலும் இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ரங்கசாமி, புதுச்சேரி நாராயணசாமி அரசாங்கத்தின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளாக இருட்டில் இருந்தது மற்றும் அவர் புதுச்சேரியை பத்து ஆண்டுக்குப் பின்னுக்குத் தள்ளியுள்ளார் என்று குற்றம்சாட்டினார். அதிமுக மற்றும் பா.ஜ.க வேட்பாளர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Similar News