புதுச்சேரி: NDA முதலமைச்சர் வேட்பாளர் N ரங்கசாமியின் சொத்து மதிப்பு எவ்வளவு?

Update: 2021-03-16 05:06 GMT

ஏப்ரல் 6 நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் NDA கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சரும் மற்றும் AINRC யின் தலைவருமான N ரங்கஸ்வாமி திங்களன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலத்தின் படி, தனது சொத்து விவரங்களில் 38.13 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களும் மற்றும் 26.22 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்களும் வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.




இந்நிலையில் 2016 இல் சட்டமன்ற தேர்தலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுவில், சொத்து விவரங்களில் 14.30 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்களும் மற்றும் 29.38 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களும் வைத்திருந்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இம்முறை ரங்கஸ்வாமி தட்டாஞ்சாவடி மற்றும் யாணம் தொகுதிகளில் இருந்து போட்டியிடுகிறார். மேலும் 66,000 ரூபாயை அறிவித்துள்ளார் இது 2016 இல் சட்டமன்ற தேர்தலில் தாக்கல் செய்த 75,000 ரூபாயை விடக் குறைவானது ஆகும். மேலும் தற்போதைய கடன் விவரங்கள் 1.15 கோடியாக அறிவித்துள்ளார்.

AINRC தலைவர் இரண்டு கார்கள் மற்றும் இரண்டு மோட்டார் பைக் உள்ளிட்டவற்றையும் வாங்கியுள்ளார். இது மற்றும் தங்கத்தின் மதிப்புகள் என மொத்தம் 26 லட்சம் வைத்துள்ளார்.



புதுச்சேரியில் ஏப்ரல் 6 30 தொகுதிகளிலும் தேர்தல் ஒரே கட்டமாக நடக்கவுள்ளது. மேலும் அதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2 இல் நடக்கவுள்ளது.

Similar News