புதுச்சேரியில் ஆட்சியை அமைக்கிறது NR காங்கிரஸ் தலைமையிலான NDA கூட்டணி!

Update: 2021-05-03 06:35 GMT

தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் 30 தொகுதிகளில் 14 தொகுதிகளில் வென்று NR காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அடுத்த அரசாங்கத்தை அமைக்கவுள்ளது. இதற்கிடையில் காங்கிரஸ் இரண்டு இடங்களிலும், திமுக மூன்று இடங்களிலும் வென்றுள்ளது.


மேலும் ஞாயிற்றுக்கிழமை இரவு நிலவரப்படி, AINRC போட்டியிட்ட 16 தொகுதிகளில் 10 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது, பா.ஜ.க போட்டியிட்ட 9 தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் வெற்றிபெற்று முதன்முறையாகப் புதுச்சேரி சட்டமன்றத்தில் தனது இடத்தை பெற்றது. 2016-2021 காலகட்டத்தில் பா.ஜ.க பரிந்துரைக்கப்பட்ட மூன்று சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.

முன்னாள் முதலமைச்சரும் மற்றும் AINRC தலைவருமான N ரங்கசாமி தனது சொந்த தொகுதியான தட்டாஞ்சாவடியில் வெற்றிபெற்றார். முன்னாள் அமைச்சரும் மற்றும் AINRC உறுப்பினருமான P ராஜவேலு, நெட்டப்பாக்கம் தொகுதியில் காங்கிரஸ் உறுப்பினரை தோற்கடித்தார். மங்களம் தொகுதியில் திமுக வேட்பாளரை தோற்கடித்து AINRC வேட்பாளர் வெற்றிபெற்றார்.


பிப்ரவரி 22 இல் யூனியன் பிரதேசத்தில் அடுத்தடுத்து ஏழு MLA க்கள் விலகியதைத் தொடர்ந்து, V நாராயணசாமி தலைமையிலான அரசாங்கம் பெரும்பான்மையை இழந்து முதல்வர் பதவியிலிருந்து விளக்கினார். மேலும் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.

source: https://www.thehindu.com/elections/puducherry-assembly/puducherry-assembly-elections-rangasamy-to-return-as-chief-minister/article34467015.ece

Similar News