புதுச்சேரி: காங்கிரஸ் 'தகர்க்கப்பட்டது' - P.கண்ணன் பேச்சு!

Update: 2021-03-17 01:30 GMT

புதுச்சேரி தேர்தலுக்கு முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பா.ஜ.கவில் இணைந்த முன்னாள் புதுச்சேரி அமைச்சர் P கண்ணன்,  காங்கிரஸ் தற்போது தகர்க்கப்பட்டு வருவதால் தான் காங்கிரஸில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளார்.



"கடந்த 55 ஆண்டுகளாகக் காங்கிரஸில் பணியாற்றி வருகிறேன். சமூக தொண்டு செய்வதற்கும், நலிவடைந்தவர்களை மேலே கொண்டுவருவதற்கு மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுத் தருவதற்கும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் அரசியலில் இணைந்தேன். ஆனால் பழைய காங்கிரஸ் தற்போது மறைந்துவிட்டது. அவர்கள் காங்கிரேஸை கொன்றுவிட்டனர்," என்று கண்ணன் தெரிவித்தார்.

"நாம் கற்பனை செய்து வைத்திருப்பது போல் காங்கிரஸ் இல்லை. காமராஜ் போன்ற பெரிய தலைவர்களைப் பார்த்த பின்னரே காங்கிரஸில் இணைந்தேன். பிரதமர் நரேந்திர மோடியைக் கண்டு நான் தற்போது பா.ஜ.க வில் இணைந்துள்ளேன். அவர் தன் நடவடிக்கைகளை எடுப்பதில் மிகவும் துணிச்சலுடன் செயல்படுகிறார்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தலில் போட்டியிடப்போவது குறித்து அவரிடம் கேட்டபொழுது, புதுச்சேரி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் மற்றும் தற்போது அதிகாரம், பதவிகளில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 இல் நடைபெறவுள்ளது மேலும் NDA கூட்டணி சார்பாக AINRC தலைவர் N ரங்க ஸ்வாமி முதலமைச்சர் வேட்பாளராக உள்ளார். மேலும் 30 தொகுதிகளில் NR காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் மற்றும் பா.ஜ.க-AIADMK 14 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளனர்.



யூனியன் பிரதேசத்தின் நாராயண ஸ்வாமி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் ஐந்து ஆண்டுகள் முடிவதற்கு முன்னரே கவிழ்ந்தது.

Similar News