புதுவை: கூட்டுறவு வங்கியில் தங்க நகைகளுக்கு பதில் கவரிங் நகைகள் வைத்து மோசடி!

புதுச்சேரி கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 410 பவுன் நகைகளை கையாடல் செய்ததாக இரண்டு ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2021-12-24 09:44 GMT

புதுச்சேரி கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 410 பவுன் நகைகளை கையாடல் செய்ததாக இரண்டு ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டை நகர கூட்டுறவு வங்கி கிளையில் பொதுமக்கள் தங்களது தேவைகளுக்காக நகைகளை வைத்து கடனாக பணம் பெற்று செல்கின்றனர். அதே போன்று மீண்டும் நகைகளை மீட்க வரும்போது வங்கி ஊழியர்கள் நகைகளை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். அப்போது ஊழியர்கள் மோசடியில் ஈடுபட்ட விவகாரம் அறிந்து கொண்ட வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது தொடர்பாக வங்கி உயர் அதிகாரிகளுக்கு தகவல் சென்றது. இதன் பின்னர் அவர்கள் வங்கியில் நேரடியாக சென்று லாக்கரில் ஆய்வு செய்தபோது, தங்க நகைகளுக்கு பதில் கவரிங் நகைகள் வைக்கப்பட்டுள்ளது. அதில் 28 வாடிக்கையாளர்களின் நகைகள் இருந்த பைகளில் கவரிங் நகைகளை வைத்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. மொத்தம் 411 பவுன் நகைகள் எனவும் தெரியவந்துள்ளது. மொத்தம் நகைகளின் மதிப்பு சுமார் 1 கோடியே 19 லட்சம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இது பற்றி அறிந்து கொண்ட வங்கி ஊழியர்கள் கணேசன் மற்றும் விஜயகுமார் என்ற சரவணன் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர்களின் வீடுகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கூட்டுறவு வங்கிகளில் இருந்து கையாடல் செய்யப்பட்ட நகைகள் வேறு இடத்தில் அடகு வைக்கப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது. 

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News