புதுச்சேரி: புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை!

புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட கடல் அரிப்பை தடுக்க புதுச்சேரி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை.

Update: 2022-12-11 12:51 GMT

மாண்டஸ் புயல் காரணமாக கடல் சென்று அதிகமாகவே காணப்பட்டு வரும் ஒரு நிலையில் கடல் பகுதியில் தற்போது பெரும்பாலான வீடுகள் அடித்து செல்லப்பட்டு இருக்கிறது. கடல் அரிப்பு காரணமாக சுமார் பத்து வீடுகள் செய்தமடைந்து தொடர்ந்து கிராம மக்கள் சாலையில் போராடி வருகிறார்கள். இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த சுமார் பல்வேறு பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தது மற்றும் சேதம் அடைந்த வீடுகளை இழந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.  


கடல் அரிப்பு ஏற்பட்டு வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். மேலும் பிள்ளை சாவடி கிராம பொதுமக்கள் இன்று கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்து தடை நிறுத்தத்தில் ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இது குறித்த தகவல் அறிந்த வந்த கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ, காலாப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் பொது விசாரணை வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.


அப்போது கடல் அரிப்பு ஏற்படும் பகுதிகளில் விரைவில் கடலில் கல் கொட்டும் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறிகளை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றார்கள். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட பிள்ளை சாவடி தமிழக பகுதிகள் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் கடல் அடைப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதி அளித்து இருக்கிறார்.

Input & Image courtesy: Thanthi

Tags:    

Similar News