10 நவீன ஆம்புலன்ஸ் வாங்க புதுச்சேரி சுகாதாரத்துறை முடிவு!

Update: 2022-03-31 04:00 GMT

புதுச்சேரி சுகாதாரத்துறைக்கு 10 நவீன ஆம்புலன்ஸ்கள் வாங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

புதுச்சேரி சுகாதாரத்துறையின் கீழ் அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கிறது. அதே நேரத்தில் கிராமங்களில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வருகின்ற நோயாளிகளுக்கு மேல் சிகிச்சை தேவைப்படுகிறது. இதனால் அவசர சிகிச்சைகளுக்கு அரசு பொது மருத்துவமனை, கதிர்காமம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அழைத்து வருவதற்கு ஆம்புலன்ஸ் வாகனம் பயன்படுத்தப்படுகிறது.

தற்போதைய நிலையில் ஆம்புலன்ஸ்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. புதுச்சேரி அரசு தற்போது சுகாதாரத்துறைக்கு தேவையான நிதியினை ஒதுக்கி வருகிறது. இதற்கிடையில் சுகாதாரத்துறை சார்பாக நவீன வசதிகளுடன் கூடிய 10 ஆம்புலன்ஸ்கள் வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. விரைவில் வாங்கப்பட்டால் கிராமப்புறங்களில் இருக்கும் நோயாளிகளை எளிதாக நகரத்திற்கு அழைத்து வந்து உயிர்களை காப்பாற்ற முடியும்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News