புதுச்சேரியில் பள்ளிகள் மூடப்படுமா? அமைச்சர் நமச்சிவாயம் பதில்!

Update: 2022-01-17 11:46 GMT

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று மீண்டும் உயர்ந்து வருவதால் 10 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் நமச்சிவாயம் பதில் அளித்துள்ளார்.

புதுச்சேரியில் ஏற்கனவே தொற்று பரவல் உயர்ந்து வரும் நிலையில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் அந்த மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதே சமயத்தில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடததப்பட்டு வருகிறது. இதனிடையே வருகின்ற ஜனவரி 19ம் தேதி முதல் திருப்புதல் தேர்வும் தொடங்கும் என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

இந்நிலையில், 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுமா என்று கல்வித்துறை மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது: மாணவர்களுக்கு தற்போது தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் 40 சதவீத மாணவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. வகுப்புகள் நடைபெற்றால்தான் அவர்களுக்கு தடுப்பூசி போட முடியும். எனவே வகுப்புகள் ரத்து செய்வது பற்றி எவ்வித முடிவும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Source: Daily Thanthi

Image Courtesy:Deccan Herald

Tags:    

Similar News