2 கோடியே 10 லட்சம் மரக்கன்றுகளை நட்டு ஈஷா அறக்கட்டளை சாதனை!
ஈஷா அறக்கட்டளை சார்பாக தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 2 கோடியே 10 லட்சம் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளது.
ஈஷா அறக்கட்டளை சார்பாக தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 2 கோடியே 10 லட்சம் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளது.
இது பற்றி ஈஷா வேளாண் காடுகள் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த 2019ம் ஆண்டு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவால் தொடங்கப்பட்டது. காவேரி ஆற்றுக்கு புத்துயிர் ஊட்டுவது மற்றும் சுற்றுச்சூழலுடன் இணைந்து விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது இந்த இயக்கத்தின் முக்கிய பங்காகும். இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் விவசாயிகள் மத்தியில் மரம் நடுகின்ற ஆர்வம் அதிகரிக்க தொடங்கியது.
மேலும், ஈஷா அறக்கட்டளை மூலம் விழுப்புரத்தில் 1700 விவசாயிகள் 6.33 லட்சம் மரக்கன்றுகளும், திருவண்ணாமலையில் 1600 விவசாயிகள் 5.29 லட்சம் மரக்கன்றுகளும், புதுச்சேரியில் 284 விவசாயிகள் 1.16 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இதனால் ஒட்டுமொத்தமாக தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 2 கோடியே 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. தற்போது அனைத்து விவசாயிகளும் மரம் சார்ந்த விவசாய முறைக்கு மாறியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Source: Daily Thanthi
Image Courtesy: Panay News