புதுச்சேரியில் கட்டுப்பாடுகள் விதிப்பு!

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தற்போது கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி தியேட்டர், பேருந்துகளில் 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வல்லவன் அறிவித்துள்ளார்.

Update: 2022-01-07 03:04 GMT

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தற்போது கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி தியேட்டர், பேருந்துகளில் 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வல்லவன் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. அனைத்து மாநிலங்களும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அதன்படி வருவாய்த்துறையினர், காவல்துறையினர், சுகாதாரத்துறையினர், உள்ளாட்சி துறையினர் இணைந்து மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே புதுச்சேரியில் நுழைவதற்கு அனுமதி உண்டு. அவர்களுக்கும் கொரோனா தொற்று இருக்கிறதா என பரிசோதனையும் செய்யப்படுவார்கள். மேலும், புதுச்சேரியில் 3வது அலை அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. வணிக வளாகம், சந்தை வளாகங்கள், கடைகளில் போதுமான காற்றோட்டத்தை உறுதி செய்வதுடன் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News