675 சுகாதார பணியாளர்களின் ஒப்பந்த காலத்தை நீட்டித்து, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு!

675 சுகாதார பணியாளர்களின் ஒப்பந்த காலத்தை நீட்டித்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.;

Update: 2021-12-03 10:26 GMT
675 சுகாதார பணியாளர்களின் ஒப்பந்த காலத்தை நீட்டித்து, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு!

675 சுகாதார பணியாளர்களின் ஒப்பந்த காலத்தை நீட்டித்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

இது குறித்து புதுச்சேரி ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முக்கியமான கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றின் 3வது அலையை எதிர்கொள்ளும் வகையில் புதுச்சேரியில் 100 சதவீத தடுப்பூசி செலுத்தும் இலக்கினை அடைய 675 சுகாதார பணியாளர்களை குறுகியகால ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர். தற்போது அவர்களின் பணியை 90 நாட்கள் பணி செய்யவும், அவர்களுக்கு ரூ.3.51 கோடி ஒதுக்கீடு செய்தும் ஒப்புதல் வழங்கியுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

Source: Daily Thanthi

Image Courtesy: Twiter


Tags:    

Similar News