புதுச்சேரி மற்றும் தமிழக எல்லையில் குயிலாப்பாளையத்தில் சிங்கார வேல் முருகன் கோயில் உள்ளது. இங்கு 32ம் ஆண்டு பங்குனி திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
அதன்படி விழாவை முன்னிட்டு தினந்தோறும் இரவு சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. இன்று காலை அபிஷேக ஆராதனைகள், காவடி ஊர்வலம் மற்றும் பக்தர்கள் அனைவரும் அலகு குத்திக்கொண்டு சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதனை தொடர்ந்து நேற்று மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது 3 பக்தர்களுக்கு மிளகாய் பொடி கரைசல் அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது அதனை பக்தர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு முருகப்பெருமானை வழிப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Daily Thanthi