ஏ.டி.எம். இயந்திரங்களில் நிரப்பாமல் ரூ.24 லட்சத்தை பாக்கெட்டில் நிரப்பிய ஊழியர் கைது !

ஏ.டி.எம். இயந்திரங்களுக்கு நிரப்ப வேண்டிய பணத்தில் ரூ.24 லட்சம் கையாடல் செய்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரங்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் பணம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் சங்கர் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

Update: 2021-09-20 08:18 GMT

இந்நிலையில், அந்நிறுவனத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தணிக்கை செய்தபோது, புதுச்சேரி இந்திராகாந்தி சிலை அருகே உள்ள ஒரு ஏ.டிஎம்மில் ரூ.24 லட்சம் நிரப்பாமல் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பி வந்த ஊழியரான வில்லியனூரை சேர்ந்த கொளஞ்சியப்பன் 42 என்வரிடம் விசாரணை நடைபெற்றது.

அப்போது கொளஞ்சியப்பனும், அவருடன் வேலை செய்து வந்த முபாரக் அலி 37 என்பவரும் சேர்ந்து ரூ.24 லட்சத்தை எடுத்துக்கொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக தனியார் நிறுவனத்தின் மேலாளர் சங்கர் பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து கொளஞ்சியப்பன் மற்றும் முகாரக் அலி ஆகிய 2 பேரை போலீசார் தேடி வந்தனர்.

இதனிடையே வில்லியனூர் பகுதியில் கொளஞ்சியப்பன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலை தொடர்ந்து கொளஞ்சியப்பனை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முகாரக் அலியை போலீசார் தேடி வருகின்றனர். வங்கி ஏடி.எம்மில் நிரப்பாமல் தங்களின் பாக்கெட்டுகளில் நிரப்பிக்கொண்டனர் என புதுவை மக்கள் பேசி வருகின்றனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News