கடல் அரிப்பை தடுக்க பாதுகாப்பு வலை புதுச்சேரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி!

கடல்அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மந்திரி உறுதி அளித்து இருக்கிறார்.

Update: 2022-11-07 00:40 GMT

புதுச்சேரியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் தூண்டில் வலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சரான வேல்முருகன் தற்போது உறுதி அளித்து இருக்கிறார். நேற்று புதுச்சேரியில் புத்தியால் பேட்டை தொகுதியில் சோலை நகர் மீனவர்களுடன் மதிய மீன்வளத்துறை இணை மந்திரி L.முருகன் அவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இதில் பங்கேற்ற சோலை நகர் பகுதியில் தூண்டில்வலை அமைக்க வேண்டும், படகு வைப்பதற்கு இடவசதி செய்து கொடுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.


மீனவ மக்களின் இந்த கோரிக்கைகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த மத்திய அமைச்சர், கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். மேலும் பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் முத்தியால் பேட்டை உறுப்பினர் செந்தில்குமார் ஏற்பாட்டில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. இதில் பா.ஜ.க மாநில தலைவர் சுவாமிநாதன் அவர்களும் கலந்து கொண்டார்.


மேலும் அமைச்சர் சாய் சரவணகுமார், அசோக் பாபு எம்.எல்.ஏ., பாஜக செயலாளர் மோகன் குமார, மீனவ அணித்தலைவர் பழனி, மகளிர் அணி தலைவர் ஜெயலட்சுமி, மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார், பட்டியல் இன தலைவர், இளைஞர் அணி செயலாளர் என பலரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியில் மீனவ மக்களின் குறிகளை கேட்டறிந்தனர். இது தொடர்பான மனுக்களையும் பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள். உடனடியாக இவர்களின் குறைகள் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Input & Image courtesy:Thanthi News

Tags:    

Similar News