புதுச்சேரி அரசு மருத்துவமனை: இலவச பேட்டரி கார் சேவையை தொடங்கிய முதல்வர்!

புதுச்சேரியில் அமைந்துள்ள அரசு பல் மருத்துவமனை கல்லூரியில் பேட்டரி கார் சேவை வசதியை முதல்வர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-09-08 02:18 GMT

புதுச்சேரியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை கல்லூரியில் இலவச பேட்டரி கார் சேவையை முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் இன்று தொடங்கி வைத்தார். புதுச்சேரி புதுவை கோரி மேட்டில் உள்ள மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ நிலையத்திற்கு சுமார் 5.25 லட்சம் மதிப்பில் 6 நபர்கள் பயணிக்க கூடிய பேட்டரி கார் முன்னாள் மாணவர்களால் இலவசமாக வழங்கப்பட்டது.


பல் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் இந்த பேட்டரி கார் மூலமாக இலவசமாக பயணம் செய்யலாம். இந்த பேட்டரி காரை பயன்படுத்தி முதியவர்கள் வயதானவர்கள் குறிப்பாக மாற்றுத்திறனாளி பயனாளிகள் பல் அலுவலகத்திற்கு நீண்ட தூரம் செல்வதற்கு பதிலாக இதை பயன்படுத்தி இலவசமாக அவர்களால் பயணிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.


மருத்துவமனை வளாகத்தில் இலவசமாக இவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் இந்த சேவையை முதலமைச்சர் ராமசாமி அவர்கள் குடியசைத்து கிடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் MLA, கே.எஸ்.பி.ரமேஷ் MLA, சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு, பல் மருத்துவக்கல்லூரி டீன் கென்னடிபாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News