பத்திரமாக இருங்கம் உங்களை மத்திய அரசு மீட்டுவிடும்: மாணவர்களுக்கு தைரியம் அளித்த முதலமைச்சர் ரங்கசாமி!
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதலால் அங்குள்ள இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர். அவர்ளை அண்டை நாடுகளின் வழியாக மத்திய அரசு மீட்டு வருகிறது. இதற்கிடையில் புதுச்சேரி மாணவர்களிடம் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி உரையாற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் இன்றுடன் 6வது நாளை தொட்டுள்ளது. இதனிடையே நேற்று பெலாரசில் இரண்டு தரப்பு பிரதிநிதிகள் பேச்சு வார்த்தையை நடத்தினர். ஆனால் பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் உக்ரைனில் சுமார் 23 பேர் படிக்க சென்றிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அவர்கள் போருக்கு நடுவில் மாட்டியுள்ளனர். அவர்கள் தற்போது பதுங்கு குழிகளில் தங்கியுள்ளனர். மாணவர்களிடம் பெற்றோர் முன்னிலையில் முதலமைச்சர் ரங்கசாமி வீடியோ காலில் பேசினார். அப்போது உங்களை மத்திய அரசு மீட்டுவிடும் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள் என்றார். இதற்காக பிரதமர் அலுவலகம் மற்றும் வெளியுறவுத்துறை அலுவலகத்தையும் தொடர்பு கொண்டு வருகிறோம் என்று மாணவர்களுக்கு தைரியம் அளித்தார்.
Source, Image Courtesy: Daily Thanthi