ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சைக்கிள் வாடகைக்கு விடும் திட்டம் தொடக்கம்!

Update: 2022-03-22 10:07 GMT

புதுச்சேரி நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சைக்கிள் வாடகைக்கு விடுகின்ற சோதனை திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

புதுச்சேரி நகருக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அது போன்று வருபவர்கள் நகரை காரில் சென்று சுற்றிப்பார்க்கின்றனர். இதனால் நகர் மாசு ஏற்படுகிறது. புகை அதிகரிப்பால் பல நோயாளிகள் பாதிப்படைகின்றனர். இதனை கருத்தில் கொண்டு நகரில் சைக்கிள் வாடகைக்கு விடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி பாரதி பூங்கா அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சைக்கிள் வாடகைக்கு விடுகின்ற திட்டம் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது. இதற்கு உறுப்பினராக விரும்பும் நபர் மாத கட்டணமாக ரூ.249, மூன்று மாத கட்டணமாக ரூ.499 செலுத்த வேண்டும். இதற்காக இலவசமாக சைக்கிள் ஓட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று புதுச்சேரி நகரில் சுற்றுலா தலங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 44 இடங்களில் சைக்கிள் நிறுத்தும் மையம் அமைக்கப்பட்டவுடன் இத்திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று ஸ்மார்ட் சிட்டி அதிகாரி கூறியுள்ளனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News