வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதன்படி புதுவையில் இன்று அதிகாலை முதலே வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. லேசான மழை பெய்த வண்ணம் இருந்தது. காலை 6 மணியளவில் பயங்கர இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்தது.
தொடர்ந்து 6.15 மணி அளவில் கனமழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்க தொடங்கியது.
நகர பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை சிவாஜி சிலை, அஜந்தா சிக்னல், புஸ்சி வீதி ஆகிய பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது. இதனால் வாகன ஒட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
Image : ஸியென்யூஸ்