"தொடர்ந்து 48 மணி நேரம் தடுப்பூசி திருவிழாவை நடத்த வேண்டும் " - புதுச்சேரி கவர்னர் தமிழிசை !
Pondicherry News.
புதுச்சேரி:
மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை புதுச்சேரி அரசு மருந்தகத்திற்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று கோரிமேட்டில் உள்ள மருந்தகத்தில் நடந்தது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு மருத்துவ உபகரணங்களை சுகாதாரத்துறையிடம் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் அருண், இயக்குனர் ஸ்ரீராமுலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரரராஜன் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில் 'கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே தீர்வு. எனவே சுகாதாரத்துறையின் மூலமாக நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் வருகிற 5-ந் தேதி காலை 8 மணி வரை தொடர்ந்து 48 மணி நேரம் தடுப்பூசி திருவிழாவை நடத்த வேண்டும். புதுவையில் தற்போது 65 சதவீதம் மக்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
Image : The Hans இந்தியா