வரதட்சணைக்காக திருமணத்தை நிறுத்திய அண்ணன், தம்பிக்கு ஒருவருடம் சிறை!

வரதட்சணைக்காக திருமணத்தை நிறுத்திய அண்ணன், தம்பிக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Update: 2021-10-28 11:02 GMT

வரதட்சணைக்காக திருமணத்தை நிறுத்திய அண்ணன், தம்பிக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

புதுச்சேரி உழவர்கரை பகுதியை சேர்ந்தவர் தாசன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 2012ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனிடையே மணமகன் தரப்பில் தாசனுக்கு பிரெஞ்சு குடியுரிமை கிடைக்க இருப்பதாக சொல்லி பெண் வீட்டாரிடம் அதிகமான வரதட்சனை கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் கேட்ட வரதண்ட்னையை பெண் வீட்டார் கொடுக்க மறுத்த விட்டனர். இதனால் திருமணத்தை மணகன் வீட்டார் நிறுத்திவிட்டனர்.

இந்நிலையில், பெண்ணின் உறவினர் வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் தாசன் அவரது அண்ணன் நாகராஜ் ஆகியோர் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தாசன் மற்றும் அவரது அண்ணன் நாகராஜ் ஆகியோருக்கு தலா ஒரு வருடம் சிறை தண்டனையும், இரண்டு ஆயிரம் அபராதமும் விதித்து தலைமை குற்றவியல் நீதிபதி மோகன் உத்தரவிட்டார்.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News