லண்டனை போன்று புதுச்சேரியும் சுற்றுலாவில் சிறந்த நகரமாகும்: ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு!

Update: 2022-04-14 01:43 GMT

புதுச்சேரியில் கடற்கரை திருவிழா அரசு சுற்றுலாத்துறை சார்பாக 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதன் தொடக்க விழா நேற்று (ஏப்ரல் 13) மாலை கடற்கரை சாலையில் உள்ள லேகபே அருகாமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை வகித்தார். ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பலூன்களை பறக்க விட்டு திருவிழாவை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் அப்போது அவர் பேசியதாவது: கடற்கரை திருவிழா நடத்துவது சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமின்றி மீனவர் சகோதரர்களுக்கும் இது உதவுவதாக அமைந்துள்ளது.

மேலும், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் புதுச்சேரியில் அதிகமாக உள்ளது. அழகிய கடற்கரை, அழகான மணற்பரப்பு, பாரம்பரிய கட்டிடங்கள், மிகவும் அழகான கிராமங்கள், இவை அனைத்தும் ஒரு மாநிலத்தில் இருப்பது என்பது அரிதான ஒன்றாகும். இந்த அனைத்து வகையிலான சிறப்பு அம்சங்களும் புதுச்சேரியில் இடம் பெற்றுள்ளது. இதனை மேம்படுத்தி வரும் சுற்றுலா துறையை பாராட்டுகிறேன்.

மேலும், லண்டலின் சுற்றுலா பேருந்தில் ஏறினால் மொத்த லண்டன் நகரத்தையும் சுற்றி காண்பிப்பார்கள். அதே போன்று புதுச்சேரியில் திட்டத்தை அறிமுகம் செய்தால் உலகம் முழுவதும் சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருவார்கள். மாநிலத்திற்கு தேவையான வருவாய் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Source: Daily Thanthi

Image Courtesy: Twiter

Tags:    

Similar News