மத்திய அரசின் முயற்சி - இன்னும் ஓராண்டிற்குள் புதுச்சேரி மிகச் சிறந்ததாக மிளிரும்!
புதுச்சேரியில் மத்திய அரசு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் காரணமாக புதுச்சேரி மிகச் சிறந்த தாக்க மிளிரும் என்று உறுதி.
புதுச்சேரியில் மேம்பாலம் கட்டுவதற்காக மத்திய அரசின் சார்பில் தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சார்பாக ரூபாய் 531 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் செல்வம் கூறியிருக்கிறார். புதுச்சேரியில் புதிதாக மேம்பாலம் கட்ட இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். இது பற்றிய செய்தியாளர்களுக்கு அவர் கூறுகையில், வேலை வாய்ப்பு புதுவை மாநில மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டு பின்னர் அவர் பேசினார்.
பிரதமர் மோடி நாடு முழுவதும் வேலை வாய்ப்பு திருவிழாவை தொடங்கியுள்ளார். இதன் மூலம் 10 லட்சம் பெயருக்கு புதிதாக வேலை வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன. பிரதமர் மோடி அரசாங்கத்தின் இத்தகைய பதிவுகள் காரணமாக நாட்டின் வேலை இல்லா திண்டாட்டம் குறையும். நேற்று மட்டும் 75 ஆயிரம் பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வருகின்ற டிசம்பர் மாதம் இறுதிக்குள் காலியாக உள்ள பத்தாயிரம் பணியிடங்களில் நிரப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் மேம்பாலம் கட்டுவதற்காக ரூபாய் 531 கோடி ஒதுக்கீடு செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இதில் முதலில் 225 கோடி புதிய சட்டசபை கட்டுவதற்கும் 531 கோடி மேம்பாலம் கட்டுவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆறாவது மற்றும் ஏழாவது ஊதிய குழுவிற்கு 150 கோடி மத்திய அரசு வழங்கும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு புதுவைக்கு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தும். இன்னும் ஓராண்டிற்குள் புதுச்சேரி மிகச் சிறந்த யூனியன் பிரதேசமாக மிளிரும் என்று அவர் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy:Thanthi News