புதுச்சேரி கடலூர் இடையே ரயில் பாதை திட்டம்.. வருகை தந்த மத்திய குழு!

புதுச்சேரி கடலூர் இடையே புதிதாக ரயில் பாதை திட்டம் கொண்டு வருவதற்காக புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய குழுவினர்.

Update: 2023-06-08 04:40 GMT

புதுவை - கடலூர் ரெயில்பாதை திட்டம் தொடர்பாக ரெயில்வே அதிகாரிகளுடன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை நடத்தினார். இந்தத் திட்டம் தொடர்பாக ரயில்வே துறை அதிகாரிகள் குப்தா என்பவரை தலைமையிலான குழு புதுச்சேரிக்கு வருகை தந்து இருக்கிறது. இவர்கள் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை சந்தித்து இது தொடர்பாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


புதுவை ரெயில் நிலையம் மற்றும் புதுச்சேரிக்கான ரெயில் சேவைகளை மேம்படுத்துவது, ரெயில் நிலையத்தில் புவிசார் குறியீடு பெற்ற சுடுகளிமண் சிற்ப அரங்கு அமைப்பது, புதுச்சேரியில் சுற்றி இருக்கும் சுற்றுலா பகுதிகள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் போன்ற இடங்களுக்கும் ரயில் சேவையை தொடங்குவது குறித்து இந்த ஒரு குழுவின் முக்கிய ஆலோசனையாக இடம் பெற்று இருந்தது.


புதுச்சேரி, மாமல்லபுரம்- கடலூர் மேலும் வில்லியனூர் ரெயில் நிலையத்தை முக்கிய நிறுத்தமாக மேம்படுத்துவது, சென்னை- மாமல்லபுரம், வழித்தடத்திலான ரெயில் சேவை திட்டத்தை விரைவுபடுத்துவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ரயில் பாதை திட்ட பணிகளை குறித்து காலத்திற்குள் நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கவர்னர் தமிழிசை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News