புதுச்சேரி: வேளாண்துறைக்கு கூடுதலாக 11 கோடி பச்சைக் கொடி காட்டிய மத்திய அரசு!

புதுச்சேரியில் வேளாண்மை துறைக்கு கூடுதலாக 11 கோடியை ஒதுக்க கவர்னர் கோரிக்கை.

Update: 2023-04-30 00:30 GMT

புதுச்சேரியில் உள்ள வேளாண்துறைக்கு மத்திய அரசு கூடுதலாக ரூ.11½ கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தினார். டெல்லியில் யூனியன் பிரதேசங்களின் கவர்னர்கள் மற்றும் நிர்வாகிகள் மாநாடு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் நடந்தது. இந்த ஒரு நிகழ்ச்சியின் போது புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கலந்து கொண்டார்.


மேலும் இந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் புதுச்சேரி மாநில பொருளாதரமாக வேளாண்மை இருந்து வருகிறது குறிப்பாக நகரமயமாதல், தொழிற்சாலை பெருக்கம் மற்றும் பல்வேறு காரணங்களால் பெரும்பாலான சவால்கள் வேளாண் துறைக்கு ஏற்பட்டு இருக்கிறது. எவ்வளவு தான் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகள் பெருமளவில் முன்னேறி இருந்தாலும் அடிப்படை ஆதாரத்தில் அவர்கள் முன்னேற வேண்டும் என்றால் பல்வேறு கட்டங்களில் முயற்சிகளையும் நாம் செய்தாக வேண்டி இருக்கிறது. புதுச்சேரிக்கு 2023-24 ம் ஆண்டுக்கான இடைக்கால ஒதுக்கீடாக ரூ.9 கோடியே 34 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.


என்றாலும், புதுச்சேரி அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு உறுதுணையாக மத்திய அரசு நிதியுதவி திட்ட ஒதுக்கீட்டின் கீழ் ரூ.11 கோடியே 45 லட்சம் அளவிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். மத்திய அரசின் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தவும் விவசாயிகளை ஊக்கப்படுத்தவும் இது பெரிதும் உதவும். இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சகத்தின் வாயிலாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News