புதுச்சேரி: மத்திய அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் வழங்கும் விழா!

மத்திய அரசின் சார்பில் 45 மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

Update: 2023-02-06 01:01 GMT

புதுச்சேரிக்கு என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அரசின் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு எளிய மக்கள் பயனடைந்து வருகிறார்கள். மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் புதுச்சேரி மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக புதுச்சேரி அரசும் மற்றும் மத்திய அரசும் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலமாக மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் உதவிகள் கிடைக்கிறது.


புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதிகள் அதிக அரசின் சமூக நலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிகாரம் அளித்தல் துறை சார்பாக மனவலி தொகுதியை சேர்ந்த 45 மாற்றுத்திறனாளிகளுக்கு தற்பொழுது உதவிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், நான்கு சக்கர நாற்காலி, காது கேட்கும் கருதிகள் உள்ளிட்டவை உபகரணங்கள் இன்று நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. இந்த ஒரு நிகழ்ச்சி தவள குப்பத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


குறிப்பாக இந்த ஒரு நிகழ்ச்சிக்கு சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு, தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், கிருஷ்ணமூர்த்தி, தவளக்குப்பம் கூட்டுறவு கடன் சங்க இயக்குனர் சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News