சனீஸ்வரர் கோயில் தேர் அலங்காரம் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி மாநிலம், காரைக்காலை அடுத்துள்ளது திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில். அங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வர். தங்களின் தோஷங்கள் நீங்க சனீஸ்வரர் பகவானை வழிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா வருகின்ற 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவில் தினந்தோறும் சாமிக்கு சிறப்பான அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. அதே போன்று இந்த விழாவின் மிக முக்கிய நிகழ்ச்சியாக ஜூன் 6ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்காக 5 தேர்கள் மும்முரமாக அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் ஏராளமான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு சில நாட்களில் அனைத்து பணிகளும் முடிவடையும் என தெரிகிறது.
Source, Image Courtesy: Daily Thanthi