புதுச்சேரி : விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் - மாநில தேர்தல் ஆணையர் தகவல்.!

புதுச்சேரி : விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் - மாநில தேர்தல் ஆணையர் தகவல்.!

Update: 2020-10-24 10:04 GMT

புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற அதிகாரி ராய் பி.தாமஸ் நியமிக்கப்பட்டார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர் நான் அரசுப்பணியில் 38 ஆண்டுகள் இருந்துள்ளேன். இதுவரை 7 தேர்தல்களை சந்தித்துள்ளேன். தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளேன். உள்ளாட்சி தேர்தல் என்பது ஜனநாயகத்துக்கு அடிப்படையானது. புதுச்சேரியில் பல்வேறு காரணங்களினால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் நடத்த சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது. தற்போது வார்டு மறுவரையறை பணிகள் முடிந்துவிட்டன. அடுத்ததாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கவேண்டும். இதற்காக வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

உறுதியாக கூறமுடியாது இப்போது கொரோனா வைரஸ் தொற்று பரவும் காலம் என்பதால் எந்தவகையில் தேர்தலை நடத்தலாம் என்று அரசியல் கட்சியினர், மருத்துவ வல்லுனர்கள், அதிகாரிகள் என அனைத்து தரப்பினருடனும் விவாதிக்கப்படும். விரைவில் நடைபெற உள்ள பீகார் சட்டமன்ற தேர்தலைக்கூட முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டால் பெண்களுக்கு 33 சதவீத வாய்ப்புகள் கிடைக்கும். உள்ளாட்சி தேர்தலை எவ்வளவு காலத்துக்குள் நடத்த முடியும், வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடத்த முடியுமா? என்பது தொடர்பாக என்னால் இப்போது உறுதியாக கூறமுடியாது. எனது நியமனம் தொடர்பான விமர்சனங்களுக்கு என்னால் இப்போது கருத்து தெரிவிக்க முடியாது என்றார்.

Similar News