புதுச்சேரியில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற சிறுமி- முதலமைச்சர் பாராட்டு!
புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஆறு வயது சிறுமி வாழ்நாள் சாதனையாளர் உட்பட இரண்டு விருதுகளை பெற்று இருக்கிறார்.
இரண்டு விருதுகளையும் ஒரே சமயத்தில் பெற்ற ஆறு வயது சிறுமி முதலமைச்சர் ரங்கசாமியிடம் வாழ்த்து பெற்றார். புதுச்சேரியில் மனவலி தொகுதி தவளக்குப்பம் சதா நகர் பிள்ளையார் தெரு வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் இவர் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். மேலும் இவரது மனைவி சரண்யா, இவர்களுடைய தம்பதியின் மகள் தான் ஷர்விகா ஆறு வயது சிறுமி. இவர் அங்குள்ள புதுவை ஜெயிண்ட ஜோசப் தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
தற்போது இரண்டு விருதுகளை தன்னிடம் வசம் வைத்து இருக்கிறார். குறிப்பாக இந்த மாணவி 100 கண்டுபிடிப்புகள் மற்றும் 100 விஞ்ஞானிகளின் பெயர்களை மூன்று நிமிடம் 26 நொடிகளில் கூறி கலாம் உலக சாதனையாளர் விருது இந்திய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆஷி ஆசிய புக் ஆஃப் ரெகார்ட் போன்று அந்த குழந்தையின் குடும்பத்தினர் சட்டசபை வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை சந்தித்தார்கள்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசமையிடம் அவர்கள் வாழ்த்துக்களையும் பெற்று இருக்கிறார்கள். இவ்வளவு சிறிய வயதில் உலக சாதனையாளர் விருது பெற்ற அந்த சிறுமியை அனைவரும் பாராட்டி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது..
Input & Image courtesy:Thanthi News