புதுச்சேரி விடுதலை நாள்: முதலமைச்சர் ரங்கசாமி கொடியேற்றி கொண்டாட்டம்!
புதுச்சேரியின் விடுதலை நாள் விழாவையொட்டி, அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி கடற்கரை சாலையில் தேசியக் கொடி ஏற்றினார். இதன் பின்னர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையையும் முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார்.;
புதுச்சேரியின் விடுதலை நாள் விழாவையொட்டி, அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி கடற்கரை சாலையில் தேசியக் கொடி ஏற்றினார். இதன் பின்னர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையையும் முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார்.
பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி கடந்த 1954ம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி விடுதலை பெற்றது. இதனை ஒவ்வொரு ஆண்டும் அம்மாநில அரசு விமர்சையாக கொண்டாடி வருகிறது. அதன்படி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம், ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் கடற்கரை சாலை உள்ளிட்டவை வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மேலும், பாரதியார் உள்ளிட்ட தேசத் தலைவர்களின் சிலைகளும் அலங்கரிக்கப்பட்டது. விடுதலை நாள் கொடியை ஏற்றிய பின்னர் முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது: "புதுச்சேரி மாநிலத்தில் 70 சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். பெரும்பாலானோர்கள் உயிரிழந்ததற்கு காரணம் தடுப்பூசி போடாமல் இருந்ததே என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர் என்றார். எனவே தடுப்பூசி போடுவதற்கு எவ்வித தயக்கமோ அல்லது அச்சமோ படத்தேவையில்லை என்றார். தற்போது மாநிலத்தில் போதுமான அளவுகள் தடுப்பூசிகள் இருக்கின்றது. எனவே மக்கள் அனைவரும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும்.
இந்தியாவில் உள்ள சிறிய மாநிலங்களின் வளர்ச்சியில் புதுச்சேரி முதலிடம் வகித்து வருகிறது. பாஜக, என்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் சிறப்பான திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து ஆதிதிராவிட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா ரூ.500 அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும். வேளாண் தொழிலில் நிலவுகின்ற வேலையாட்கள் பற்றாக்குறையை போக்க இயந்திரமயமாக்கல் மூலம் ஈடுகட்ட அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Puthiyathalamurai