புதுவையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவரின் வீடு அபகரிப்பு: தூதரகத்தில் புகார் அளித்ததால் பரபரப்பு!

Update: 2022-07-09 14:27 GMT

புதுச்சேரி கந்தப்ப முதலியார் வீதியை சேர்ந்தவர் காந்திராஜ். இவர் ஒரு பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர் ஆவார். இவர் புதுவையில் உள்ள பிரெஞ்சு துணை தூதரகத்தில் பரபரப்பான ஒரு புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், புதுவை கந்தப்ப முதலியார் வீதியில் என்னுடைய மாமா செல்வமணி என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. அவர் பிரெஞ்சு குடியுரிமை பெற்றிருப்பதால் தற்போது பிரான்ஸில் வசித்து வரும் நிலையில், இவரது புதுச்சேரியில் உள்ள வீட்டில் லாஸ்பேட்டையை சேர்ந்த விஜய் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு வாடகைக்கு குடியேறினார்.

ஆனால் குடியேறிய பின்னர் சரியாக வாடகை தராமல் இழுத்தடித்து வந்தார். இதனால் அவரை காலி செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர் அங்கிருந்து காலி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்க. இதற்கு மத்தியில் விஜய் மோசடி வழக்கு ஒன்றுக்காக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், சிறையில் இருந்து வெளியில் வந்த விஜய், ரவுடிகள் மூலமாக அந்த வீட்டை மீண்டும் அபகரித்துக் கொண்டார். மேலும் ரவுடிகளை வைத்து கொலை செய்வதற்கும் மிரட்டியுள்ளார். இது தொடர்பாக ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். அதாவது இரண்டு எம்.எல்.ஏ.க்களின் தூண்டுதலின் பேரில் போலீசார் புகாரை ஏற்பதற்கு மறுக்கின்றனர். எனவே இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy: Pinterest

Tags:    

Similar News