புதுச்சேரி: கோர்ட்டுகளில் முக கவசம் அணிவது கட்டாயம்!
புதுச்சேரியில் கோர்ட்டுகளில் முக கவசம் அணிவது கட்டாயம்..
நாட்டில் தற்பொழுது பெருமளவில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் மீண்டும் எழுச்சி சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது. தற்போது அதிகமாக இருந்து வருகிறது ஓமைரான் வைரஸின் தாக்குதல் அதிகமாக இருந்து வருகிறது. தொடர்ச்சியாக கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் நேரடியாக ஆன்லைன் வழியாக வழக்குகள் விசாரிக்கப்படும் என்று நடைமுறை கடந்த பத்தாம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இப்பொழுது நாளுக்கு நாள் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 ஆகிறது கடந்துவிட்டது. இதன் காரணமாக சென்னை மற்றும் தமிழகம் புதுச்சேரி முழுவதும் நாளை மறுதினம் முதல் நீதிமன்றங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எனவே புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கோர்ட்டுகளில் நாளை மறுதினம் அதாவது 17ஆம் தேதி முதல் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்துதான் வரவேண்டும் என்றும் திட்டவட்டமாக உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இது குறித்து நீதிமன்றம் தலைமை பதிவாளர் சார்பில் அளித்துள்ள அறிக்கையில் கூறுகையில், கோர்ட் அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் வக்கீல் பொதுமக்கள் என அனைவரும் பொழுது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Input & Image courtesy: Maalaimalar