புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது.. சபாநாயகர் அறிவிப்பு.!
புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது.. சபாநாயகர் அறிவிப்பு.!
புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி அமைத்து வந்தது. முதலமைச்சராக நாராயணசாமி பதவியில் இருந்தார். காங்கிரஸ் மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் நாராயணசாமி அரசுக்கு பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் இருந்தது.
இதனிடையே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆளுநர் மற்றும் பேரவை செயலாளரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் நாராயணசாமி அரசுக்கு போதிய உறுப்பினர்களின் ஆதரவு இல்லை எனவே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். அதன்படி இன்று புதுச்சேரியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் போதிய உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால் நாராயணசாமி அரசு பெரும்பான்மை இழந்ததாக அம்மாநில சபாநாயகர் அறிவித்தார். இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்படுகிறது.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் ஆட்சி கலைக்கப்படுவது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.