கொரோனா பெருந்தொற்று காரணமாக புதுச்சேரி அரசு அலுவலகங்களில் 50 சதவீதம் பேர் பணிக்கு வந்தால் போதும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களை காட்டிலும் புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி அரசின் சார்பு செயலர் ஜெய்சங்கர் அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
குரூப் ஏ அதிகாரிகள் அனைவரும் பணிக்கு வரவேண்டும். அதேபோன்று சார்பு செயலர்கள், துறைத் தலைவர்கள், துறை நிர்வாகிகள் அனைவரும் பணிக்கு வரவேண்டும். மேலும் குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவு அதிகாரிகள் 50 சதவீதத்தினர் பணிக்கு வந்தாலே போதுமானதாகும். அதே சமயம் கர்ப்பிணிகள் பணிக்கு வருவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வீடுகளிலேயே இருந்து பணியாற்றலாம் என கூறப்பட்டுள்ளது.
Source,Image Courtesy: Hindutamil