புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு!

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பல்வேறு வகையிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது தொற்று குறைந்து வந்தாலும் புதிய வகையிலான வைரஸ் எதிரொலித்துள்ளது.

Update: 2021-12-01 04:21 GMT

புதுச்சேரியில் மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் 15ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பல்வேறு வகையிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது தொற்று குறைந்து வந்தாலும் புதிய வகையிலான வைரஸ் எதிரொலித்துள்ளது.

இதனை கட்டுப்படுத்தும் விதமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்படி மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகின்ற 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும், சமூக நிகழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு தொடர்பாக மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடற்கரை மற்றும் பூங்கா போன்றவை இரவு ஊரடங்கு நேரம் தவிர மற்ற சமயங்களில் திறந்திருக்கலாம். வழக்கம் போன்று கோயில் திருவிழாக்கம், மத விழாக்கள் நடைபெறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமண விழாக்களில் 100 பேர் மிகாமலும், இறுதி ஊர்வலங்களில் 20 பேர் வரை கலந்து கொள்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Source: Daily Thanthi

Image Courtesy:Nakkheeran


Tags:    

Similar News