புதுச்சேரி: கொரோனா தொற்று பாதிப்பு 100க்கு கீழ் குறைந்தது!
புதுச்சேரியில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 57 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 86 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 256 ஆக உயர்ந்துள்ளது.;
புதுச்சேரியில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 57 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 86 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 256 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது மருத்துவமனைகளில் 158 பேர், வீடுகளில் 761 பேர் என்று மொத்தம் 919 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். நேற்று மட்டும் 126 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி ராஜா நகரை சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இதனால் மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,828 ஆக உயர்ந்துள்ளது.
அதே போன்று புதுச்சேரியில் கடந்த ஒரு சில நாட்களாக தொற்று பாதிப்பு 100க்கு மேல் பதிவாகியிருந்த நிலையில், நேற்று தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 100க்கும் குறைவாகவே இருந்தது. இதுவரை 8 லட்சத்து 88 ஆயிரத்து 894 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Maalaimalar