ஒரு நாள் கலெக்டராக அரசு பள்ளி மாணவி: புதுவையில் நெகிழ்ச்சி சம்பவம்!

புதுச்சேரியில் தற்பொழுது ஒரு நாள் கலெக்டராக அரசு பள்ளி மாணவி தேர்வு.

Update: 2023-03-03 01:15 GMT

புதுச்சேரியில் கதிர் கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி ஐஸ்வர்யா நேற்று ஒருநாள் கலெக்டராக பதவி ஏற்று இருக்கிறார். குறிப்பாக அவர் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. காலையில் அலுவலகம் வந்த அவரை வரவேற்ற கலெக்டர் மணிகண்டன் கலெக்டரின் இருக்கையில் அமர வைத்து வேலைகள் குறித்து விளக்கங்களை அவருக்கு அளித்திருக்கிறார். குறிப்பாக கலெக்டருக்கு வரும் கோப்புகள் மற்றும் புகார்கள் கையாளுவது குறித்து பல்வேறு வகைகளில் விளக்கங்கள் அளிக்கப்பட்டு இருக்கிறது.


மேலும் பொது மக்களை எவ்வாறு அணுகுவது? மாவட்டங்களில் மேற்கொள்ளும் ஆய்வுகளை எப்படி செய்வது? என்பது குறித்த பல்வேறு கோணங்களில் அவருக்கு விரிவான தகவல்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் புதுச்சேரியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்தும் ஆய்வுகள் கலெக்டர் மற்றும் ஒரு நாள் கலெக்டர் ஆன மாணவி மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் புதுவை சட்ட சபைக்கு வந்த அவர் சபாநாயகர் செல்வத்தை சந்தித்து பேசினார். அப்பொழுது அவருக்கு செல்வம் சாலை அணிவித்து வாழ்த்துகளையும் தெரிவித்தார்.


தொடர்ந்து பணியில் இருக்கும் ஐஸ்வர்யா என்ற மாணவி இது பற்றி கூறுகையில், ஒரு நாள் கலெக்டராக பொறுப்பேற்று இருப்பதும் மறக்க முடியாத ஒரு அனுபவம். சாதாரண மக்களின் குறிகளை கேட்ட அவர்களை நிவர்த்தி செய்வது, கலெக்டர் என்றால் கையெழுத்துவது போடுவது மட்டுமே வேலை இல்லை, மக்களுக்காக உழைக்க வேண்டும். தொடர்ந்து நன்றாக படித்து நான் நானும் கலெக்டராக வருவேன் என்று அவர் கூறியிருக்கிறார். மேலும் அரசு செயல்படுத்தும் மக்கள் நலத்தணி திட்டங்கள் குறித்து அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலெக்டருடன் ஒரு நாள் என்று நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும் என்றும் கலெக்டர் அவர்கள் கூறினார்.

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News