காரைக்காலில் காலரா தொற்று எதிரொலியாக அந்த மாவட்டம் முழுவதும் பொது சுகாதார அவசரநிலை தற்போது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் முழுவதிலும் சில நாட்களாக வாந்தி, வயிற்றுப்போக்கு அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது இதனை மேலும் அதிகரிக்காமல் கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீ ராமுலு காரைக்கால் மருத்துவ குழுவினருடன் இரண்டாவது முறையாக ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வயிற்றுப்போக்கு அதிகரிப்பு காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் வயிற்றுப்போக்கு நோய்த்தொற்றானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது பற்றி தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டதில் திருப்திகரமாக இல்லை. இதில் சில நோயாளிகளுக்கு காலரா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வயிற்றுவலியால் மருத்துவனைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தற்போது குடும்ப நலத்துறை இயக்குனரகம் காரைக்கால் மாவட்டத்தை பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனப்படுத்தியுள்ளது. இதற்காக மருத்துவ பணியாளர்கள் தொடர்ந்து கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து ஆறிய பின்னர் குடிக்க வேண்டும். சாப்பிடும் முன்னர் கைகளை நன்கு கழுவுதல் மற்றும் சுகாதார நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டும். சரியான முறையில் சமைத்த உணவுகளை சாப்பிட வேண்டும். பாதுகாப்பான முறையில் கழிப்பிட வசதிகளை மேற்கொள்ள வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்பது மிகவும் நன்று. வயிற்றுப்போக்கு அதிகமாக இருப்பவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அனுக வேண்டும். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Daily Thanthi