புதுச்சேரி - ரயில்வே பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு குடிசைகள் இடித்து அகற்றம்!
ரயில்வே பகுதியில் ஆக்கிரமிப்பு குடிசைகள் இடித்து அகற்றம்.
உப்பளம் கீழ் தோப்பு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 22 குடிசைகள் அதிரடியாக இடிக்கப் பட்டு அகற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து போராட்டம் நடத்திய தி.மு.க எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார். இதில் புதுச்சேரி உப்பளம் கீழ் தொகுப்பு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 22 குடிசைகள் அதிரடியாக இடிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளது. ரயில்வே நிலம் ஆக்கிரமிப்பு புதுச்சேரி ரயில்வே நிலையத்திற்கு சொந்தமாக பின்புறம் உள்ள உப்பளம் தொகுதி கீழ் தோப்பில் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டுமுள்ள சுமார் 22 குடும்பத்தினர் குடிசை சிமெண்ட் அமைத்து வீடுகளை கட்டி வசித்து வந்தார்கள்.
இது ஆக்கிரமிப்பில் கட்டப்பட்ட வீடுகள் என்று ஏற்கனவே ரயில்வே துறை தரப்பில் இருந்து நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நோட்டீஸ்க்கு எதிராக, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் அந்த இடத்தில் வசித்து வருகின்றார்கள். இந்நிலையில் புதுச்சேரி ரயில்வே நிலையம் விரிவாக்க பணி நடைபெற உள்ளது. இதற்காக ஆக்கிரப்புகளை அவற்றின்படி ரயில்வே நிர்வாகம் சார்பில் ஏற்கனவே பலமுறை நோட்டஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் மக்கள் அந்த நோட்டஸ்க்கு பதில் அளிக்கவில்லை. இதன் தொடர்ந்து தென்னக ரயில்வே உதவி பாதுகாப்பு ஆணையர் சின்னதுரைபழனி, மண்டல பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் ரயில்வே போலீஸ் சார் உட்பட பலரும் இணைந்து ஏழு மணி அளவில் கீழ் தோப்பு பகுதியில் அதிரடியாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடுகளை அகற்றியுள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Input & Image courtesy:Daily Thanthi News