முதலமைச்சர் நாராயணசாமிக்கு பெரும்பான்மை நிரூபிக்க துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு.!

முதலமைச்சர் நாராயணசாமிக்கு பெரும்பான்மை நிரூபிக்க துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு.!

Update: 2021-02-18 19:43 GMT

புதுச்சேரி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை வருகின்ற 22ம் தேதி நிரூபிக்க துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் அடுத்தடுத்து தங்களது அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தார்கள். இதனால் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்று புதுச்சேரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், பேரவையை கூட்டி தங்களின் பெரும்பான்மை நிரூபிக்க துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். சில வழிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே பேரவை கூட்டப்பட வேண்டும். 

வாக்கெடுப்பில் உறுப்பினர்கள் கைகளை தூக்கித்தான் வாக்களிக்க வேண்டும். மேலும் பேரவையின் அனைத்து நடவடிக்கைகளையும் பதிவு செய்ய வேண்டும். இவை அனைத்தையும் அன்று மாலை 5 மணிக்குள் முடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனை பேரவை செயலளர் உறுதிப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதனால் புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்குமா அல்லது ஆட்சியை கலைத்து விட்டு மீண்டும் தேர்தலை சந்திக்குமா என்பது பொறுப்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

Similar News