புதுச்சேரி: கொலை, கொள்ளை, நிலஅபகரிப்பு ரவுடிக்கு சீட் வழங்கும் தி.மு.க.!

புதுச்சேரி மாநிலத்திற்கு அடுத்த மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் வேட்பாளர் தேர்வு என்று மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

Update: 2021-03-11 03:13 GMT

புதுச்சேரி மாநிலத்திற்கு அடுத்த மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் வேட்பாளர் தேர்வு என்று மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

அதில் பிரதான கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அதே நேரத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி இழுபறி நீடித்து வருகிறது. விரைவில் அவர்கள் கூட்டணி இறுதி செய்து தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். அப்படி வரும் நேரத்தில் திமுக சார்பில், புதுச்சேரி தட்டஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவர் மீது கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு அது மட்டுமின்றி குண்டர் சட்டத்தில் கைதாகி அண்மையில் விடுதலையாகியுள்ளார்.




 


இதனால் காலாப்பட்டு தொகுதியில் போட்டியிடுவதற்காக செந்தில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். அதே நேரத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டாலும் சீட் செந்திலுக்குத்தான் என்று கூறப்படுகிறது.

நாராயணசாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் திமுக, காங்கிரஸ் அட்டூழியங்களை நினைத்து மக்கள் இன்று வரை பயந்து கொண்டுதான் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருக்கும் பட்சத்தில் வருகின்ற தேர்தலில் ரவுடிக்கு சீட் கொடுப்பதை புதுச்சேரி மக்கள் ரசிக்கவில்லை. இதனால் வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்திக்க போகிறது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் திமுக செய்யும் அட்டூழியங்களை இன்றும் மக்கள் மறந்துவிடவில்லை. இது போன்ற ரவுடிக்கட்சிகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவும் மாற்றார்கள் என்பது உண்மையே.

Similar News