உண்மையான தியாகிகள் டாக்டர்கள் தான்... புதுவை கவர்னர் தமிழிசை கூற காரணம் என்ன?
சுயநலமின்றி உழைக்கும் உண்மையான தியாகிகள் டாக்டர்கள் தான்- புதுவை கவர்னர் தமிழிசை பேச்சு.
நாடு முழுவதும் மருத்துவர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கருத்தரங்க விழாவின் போது கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார். இந்த விழாவின் போது பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு அவர் விருதுகளையும் வணங்கி பாராட்டுகளை தெரிவித்தார். பின்னர் இந்த கருத்தரங்கில் சிறப்பு உரையாற்றிய தமிழிசை அவர்கள் கீழ்க்கண்டவாறு உரையை நிகழ்த்தி இருக்கிறார்.
"மருத்துவராக இருப்பது சாதாரண காரியமல்ல. ஏனெனில் இதில் அவ்வளவு பொறுமையாக இருக்க வேண்டும். குறிப்பாக இந்த துறையில் பணியாற்றும் பெண்களுக்கு இதில் பெரும்பாலான கஷ்டங்கள் இருந்து வருகிறது. அதனால் தான் தற்போது புதுச்சேரியில் அரசு அலுவலகத்தில் பணியாற்றும் பெண்களுக்கு இரண்டு மணி நேரம் சலுகை நேரத்தை வழங்கி இருக்கிறோம். சமீபத்தில் தெலுங்கானாவில் முதுகலை படிக்கும் ஒரு பெண் டாக்டர் தற்கொலை செய்துகொண்டார். அவரது சாவுக்கு பல காரணங்களை கூறினார்கள்.
குறிப்பாக மருத்துவ உயர்கல்வியின் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் மன அழுத்தத்தின் காரணமாக 300 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது. என்னுள் ஒரு மருத்துவராக இதை நான் உணர்ந்து கொள்ள முடிகிறது. Bஇதனால் சமீபத்தில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தரிடம், மாணவர்களுக்கு என்னென்ன வசதி செய்து தர முடியுமோ அதை செய்து தாருங்கள் என்றேன். ஏனெனில் அவர்கள் தான் உண்மையான தியாகிகள் என்று கூறினார்.
Input & Image courtesy: News