ரூ.12 கோடியில் குடிநீர் திட்ட பணிகள்... புதுச்சேரியில் முதல்-அமைச்சர் தொடக்கம்..

Update: 2023-06-24 05:04 GMT

புதுச்சேரியில் தற்பொழுது முதலமைச்சர் ரங்கசாமி சார்பில் 12 கோடி செலவில் குடிநீர் திட்ட பணிகள் நிறைவு பெற்று இருக்கிறது. மேலும் நிறைவு பெற்ற திட்டப்பணிகளை புதுச்சேரி மக்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி அர்ப்பணித்து இருக்கிறார். குறிப்பாக இந்த ஒரு குடிநீர் திட்ட பணிகள் மூலமாக பல்வேறு தரப்பு மக்களும் பயன் பெற இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. குடிநீர் திட்ட பணிகள் புதுவையில் உள்ள வைத்திக்குப்பம் பகுதி மக்களுக்கு காட்டாமணிக்குப்பத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.


இந்த பகுதியில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இதன் காரணமாக ஒருங்கிணைந்த கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன்படி வைத்திக்குப்பத்தில் 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டடுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி, நீர் உந்து குழாய்கள், நீர் வினியோக குழாய்கள், மோட்டார் பம்புசெட்டு ஆகியவை அமைக்க திட்டமிடப்பட்டது.


இதன்படி ரூ.12 கோடியே 30 லட்சம் செலவில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக இந்த திட்டம் அர்ப்பணிக்கப்பட்டு இருக்கிறது. பொது மக்களுக்காக இந்த குடிநீர் திட்டத்தை புதுச்சேரி முதலமைச்சர் நேற்று தொடங்கி வைத்து இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News