கனமழை எதிரொலி.. காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.!

கனமழை எதிரொலி.. காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.!

Update: 2020-12-07 09:00 GMT

மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருமாறும். தற்போது மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மாண்டலமாக வலுவிழந்தாலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் கொட்டி தீர்த்த கன மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

அதே போன்று நிவரை தொடர்ந்து தற்போது புரெவி புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. புயல் ஓய்ந்தும் மழை பெய்து வருவதை காணமுடிகிறது.

இந்நிலையில், கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் மாணவர்கள் சிலர் பள்ளிகளுக்கு புறப்பட்டு சென்றபோது இந்த உத்தரவு காரணமாக மீண்டும் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
 

Similar News